15/01/2025
மகளுக்கும் கடத்திவருக்கும் - எந்தத்தொடர்புகளும் இல்லை
பணம் பறிக்க முயற்சி - தப்பிக்க பொய் கூறுகிறார்
இளைஞன் அர்சாதுக்கும் நன்றி - கடத்தல்காரன் சகோதரியின் மகன்
-கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சிறுமியின் தந்தை ஊடகங்களுக்கு தகவல்
நேற்று முந்தினம் (12) இடம்பெற்ற 18 வயது பாடசாலை மாணவியின் கடத்தல் விவகார தொடர்பில் அவரது தந்தை எம்.எம்.ஹில்மி ஊடகங்களுக்கு இன்று (14) தகவல் வழங்கியுள்ளார்
தன்னிடம் பணம் பறிப்பதற்காக மேற்கொண்ட கிரிமினல் நடவடிக்கையை மறைப்பதற்காக
தனது சகோதரியின் மகன் பொய்யான தகவல்களை சமூக மயப்படுத்தி வருகிறார்.
இக்கடத்தல் முயற்சியை முறியடித்த ஸ்ரீலங்கா பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், மகளை கடத்திச்செல்லும் போது, மகளைக்காப்பாற்றுவதற்காக முயற்சித்த அர்ஷாத் என்ற இளைஞனுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
500,0000 ரூபா கப்பம் கேட்ட போது அதை வழங்குவதை நம்ப வைப்பதற்காக முதலில் 50,000 பணத்தை அவருக்கு இணைய வழி பணப்பரிமாற்றம் மூலம் வழங்கினோம்.
அதன் பின் பொலிஸ் நிலையம் மற்றும் கொழும்பில் CID
காரியாலயத்துக்கு அறிவித்து மகளை மீட்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் முழுப் பணத்தையும் Online மூலம் வழங்குவது கஷ்டமாக இருப்பதால் கொஞ்சம் கொஞ்சம் போடுவதாகவும் அந்தளவு பணம் கையிருப்பில் இல்லாததால் வங்கியில் இருந்தே பணத்தைப் பெற வேண்டுமென்றும் பணத்தைத் தருவதற்கு கால அவகாசம் கொஞ்சம் தருமாறும் கூறி அவரை கைது செய்யும் வரை கால தாமதத்தை ஏற்படுத்தினோம்.
அத்துடன், மகளுக்கும் அவனுக்கும் எந்த விதமான
காதல் உறவுகளோ, அவருக்கும் எங்களுக்கும் எந்தவித கொடுக்கல் வாங்கல்களோ இல்லை.
2025ம் ஆண்டு மகள் உயர்தரப்பரீட்சை எழுதுகிறார். கப்பம் பெறும் முயற்சியும் கடத்தல் முயற்சியும் தோல்வியடைந்ததால் பொய்களைக்கூறித் தப்பிக்க முயற்சிக்கின்றார்.
எனவே, அவரின் இக்கேவலமான செயலுக்கு சட்டம் மிக உச்ச தண்டனையை வழங்க வேண்டுமென பாதுகாப்புத்தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
உண்மையில் பாடசாலை மாணவிகளின் இவ்வாறான செயற்பாடுகள் அவர்களது எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு பதிவுகள் இடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
உண்மையில் இச்சிறுமியின் தைரியமான தந்தை குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென்ற உறுதிப்பாட்டில் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்து தகவல்களைப் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.
உள்ளக விவகாரங்கள் எவ்வாறு இருந்தாலும் ஒரு படிக்கின்ற பிள்ளை இவ்வாறு கடத்தப்படுவதை மகள்களைப்பெற்ற எவரும் அனுமதிக்கமாட்டார்கள்.
(சமூக விழிப்புக்காக)
ஊடகவியலாளர் பாரிஸ்