Batti.lk

Directions Website Contact the business

Batti.lk Your Trusted Digital Media Partner in Batticaloa.

மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த மண்முனை பிரதேச சபை - உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான விவாதப் போட்டியில் தேசிய ரீதியில...
24/09/2026

மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த மண்முனை பிரதேச சபை - உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான விவாதப் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாமிடம்!

Batti.lk
உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட விவாதப் போட்டியில் மண்முனை பிரதேச சபை தேசிய ரீதியில் இரண்டாமிடம் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

சுமார் 80 உள்ளூராட்சி மன்றங்கள் பங்கேற்ற இந்த தேசிய மட்ட விவாதப் போட்டியில், மண்முனை பிரதேச சபையின் சார்பில் சபைத் தவிசாளர் கே. செந்தில் குமார் தலைமையில், சபையின் செயலாளர் ரோகிணி விக்னேஸ்வரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாகப் பங்கேற்று தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றதன் மூலம் மண்முனை பிரதேச சபை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

இதற்கான பணப்பரிசில், சின்னம் என்பவற்றை தவிசாளர் கே. செந்தில் குமார் பெற்றுக் கொண்டதுடன் பங்குபற்றி சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய உறுப்பினர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டது.

இச்சாதனைக்காக மண்முனை பிரதேச சபைத் தவிசாளர், செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்ற குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

22/09/2026

8 வயதில் உலக சாதனை படைத்த இலங்கைத் தமிழ் மாணவன்!

02/09/2026

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரிதவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் மட்டக்களப்பு அலுவலகத்திற்குச் சென்று, அங்கே பணியாற்றும் தமிழ் அதிகாரி ஒருவரை மிரட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட அபிவிருத்தி குழுவின் முடிவிற்கமைய நூற்றுக்கணக்கான மண் அகழ்வு அனுமதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த அனுமதிகளைக் கோரி அலுவலகத்திற்குச் சென்ற தேரர், பணியகத்தின் பணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதிகாரியை மிரட்டிய காட்சி பதிவாகியுள்ளது. இந்தச் செயலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

சட்டத்தை நிலைநாட்ட முயலும் அதிகாரியை அச்சுறுத்துவதை அவர்கள் கண்டித்துள்ளனர். அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இவ்வாறான சர்ச்சைக்குரிய மற்றும் இனவாதப் போக்குடைய கருத்துகளை இதற்கு முன்னரும் வெளிப்படுத்தியுள்ளார்.

காணொளி/ Ampitiye Sumanarathna Thero

வரட்சியால் மட்டக்களப்பில் நாளாந்தம் 4 மணிநேர நீர் வெட்டு!Batti.lkமட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக ...
22/08/2026

வரட்சியால் மட்டக்களப்பில் நாளாந்தம் 4 மணிநேர நீர் வெட்டு!

Batti.lk
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதால், குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நாளாந்தம் சுமார் நான்கு மணிநேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. அதன்படி, தினமும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை, பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன், அத்தியாவசிய தேவைகளுக்காக போதுமானளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

மட்டக்களப்பில் விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்களுக்கு திறன் விருத்திப் பயிற்சி!Batti.lkகொழும்பு தேசிய விளையாட்டு அறிவி...
22/08/2026

மட்டக்களப்பில் விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்களுக்கு திறன் விருத்திப் பயிற்சி!

Batti.lk
கொழும்பு தேசிய விளையாட்டு அறிவியல் நிறுவனத்தின் (National Institute of Sports Science) அனுசரணையுடன், கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவும் இணைந்து, மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறைப் பயிற்றுவிப்பாளர்களுக்கான நான்கு நாள் திறன் விருத்திப் பயிற்சி நெறியை ஏற்பாடு செய்திருந்தன.

கடந்த 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள், பாடசாலை உடற்கல்வி ஆசிரியர்கள், பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் தனியார் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தேசிய விளையாட்டு அறிவியல் நிறுவனத்தின் விரிவுரையாளர்கள் வளவாளர்களாகப் பங்கேற்று, விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்குத் தேவையான பல்வேறு பயிற்சிகளையும் நடைமுறை அறிவுரைகளையும் வழங்கினர்.

பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 20ஆம் திகதி பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான ஜே. எஸ். அருள்ராஜ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இதன்போது, ஓய்வுபெற்ற மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பி. ஜெயக்குமார், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். வை. ஆதம், புதிதாக நியமனம் பெற்றுள்ள மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஜி. பி. ஜோன்பிள்ளை மற்றும் தேசிய விளையாட்டு அறிவியல் நிறுவனத்தின் போதனாசிரியர் எம். சஜினாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தராக நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்ற பி. ஜெயக்குமார் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தின் விளையாட்டுத்துறையை வலுப்படுத்தவும், திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான பயிற்றுவிப்பாளர்களின் ஆற்றலை மேம்படுத்தவும் இத்தகைய திறன் விருத்திப் பயிற்சிகள் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஷ்வரர் ஆலய மஹோற்சவம்  6 ஆம் நாள் திருவிழா
09/08/2026

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஷ்வரர் ஆலய மஹோற்சவம் 6 ஆம் நாள் திருவிழா

மழைக்கு மத்தியிலும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஆர்வத்துடன் தோற்றிய மலையக மாணவர்கள்!Batti.lk   #மலையகம்
09/08/2026

மழைக்கு மத்தியிலும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஆர்வத்துடன் தோற்றிய மலையக மாணவர்கள்!
Batti.lk

#மலையகம்

யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவி நிரோஷினி அகால மரணம்!Batti.lkயாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்த...
08/08/2026

யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவி நிரோஷினி அகால மரணம்!

Batti.lk
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:குறித்த மாணவி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்தார்.

இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இம்மாணவி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கற்ற சமூகத்தில் ஏற்படும் தொடர்ச்சியான இழப்புகள் ஈடு செய்ய முடியாத பாரிய இழப்புகளாகவே பார்க்கப்படுகின்றன.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் அதிபருக்கு பிரியாவிடை விழா!Batti.lkசிசிலியா தேசியப் பாடசாலையின் அத...
08/08/2026

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் அதிபருக்கு பிரியாவிடை விழா!

Batti.lk
சிசிலியா தேசியப் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி நிதாஞ்சலி அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை விழா நேற்று (07)காலை 9.00 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஒழுங்கு செய்த இந்நிகழ்வில், ஓய்வு பெறும் அதிபருக்கு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அவரது கல்விப் பணியையும் சேவையையும் எடுத்துரைக்கும் வரலாற்றுக் குறும்படம் திரையிடப்பட்டது.

பின்னர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், நிகழ்வு உணர்வுபூர்வமான சூழலில் நிறைவுற்றது.

தென்னை விவசாயிகளுக்கு 22.7 மில்லியன் ரூபாய் மானியக் காசோலைகள் வழங்கி வைப்பு!Batti.lkவட தென்னை முக்கோணத் திட்டத்தின் கீழ்...
08/08/2026

தென்னை விவசாயிகளுக்கு 22.7 மில்லியன் ரூபாய் மானியக் காசோலைகள் வழங்கி வைப்பு!

Batti.lk
வட தென்னை முக்கோணத் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு தென்னை விவசாயிகளுக்கு ரூ. 22.7 மில்லியன் மானியக் காசோலைகளும் 3,000 தென்னங் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தென்னை ஏற்றுமதி வருமானத்தை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வருடாந்த தென்னை உற்பத்தியை 4,200 மில்லியன் தேங்காய்களாகவும் உயர்த்தும் தேசிய இலக்கை அடைவதற்காக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் தென்னை பயிர்ச்செய்கை சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் "கற்பகத்தரு வளம்" திட்டத்தின் கீழ், "வட தென்னை முக்கோண" திட்டத்தின் மற்றொரு முக்கிய கட்டமாக ரூ. 22.7 மில்லியன் மானியக் காசோலைகள் வழங்குதலும், 3,000 தென்னங் கன்றுகள் விநியோகித்தலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளைப் பகுதியில் இடம்பெற்றது.

பருத்தித்துறை, சிலாபத்துறை மற்றும் கொக்கிலாய் ஆகிய பகுதிகளை இணைத்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் நடைமுறைப்படுத்தப்படும், இத்தேசிய திட்டம் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

வட மாகாணத்தில் தென்னை பயிர்ச்செய்கையை விரிவாக்குதல், பயன்படுத்தப்படாத நிலங்களை மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல் மற்றும் தேசிய ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்குதல் ஆகியன இதன் முக்கிய நோக்கங்களாகும்.

இதன்போது, வட தென்னை முக்கோணத் திட்டத்தின் கீழ் தென்னை காணிகளுக்கான நீர்ப்பாசன அமைப்புகளை அமைப்பதற்காக 443 தென்னை விவசாயிகளுக்கு மானியக் காசோலைகள் வழங்கப்பட்டதுடன், சிறப்புத் தென்னை காணி மறுசீரமைப்பு மானியத் திட்டத்தின் கீழ் மேலும் 72 தென்னை விவசாயிகளுக்கு மானியக் காசோலைகள் வழங்கப்பட்டன.

இதன்படி, 515 பயனாளிகளுக்கு மொத்தமாக ரூ. 22.7 மில்லியன் மானியம் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், வட மாகாணத்தில் தென்னை பயிர்ச்செய்கை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சுமார் 3,000 தென்னங் கன்றுகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.

"கற்பகத்தரு வளம்" திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் "வட தென்னை முக்கோணம்" திட்டமானது, இலங்கையின் வட மாகாணத்தை ஒரு புதிய தென்னை உற்பத்தி வலயமாக்குதல், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதல், தென்னை சார்ந்த தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களைத் தொடர்ச்சியாக வழங்குவதை உறுதிசெய்தல் மற்றும் தேசிய ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Address

Trinco Road
Batticaloa
30000

Opening Hours

Monday 06:30 - 23:00
Tuesday 06:30 - 23:00
Wednesday 06:30 - 23:00
Thursday 06:30 - 23:00
Friday 06:30 - 23:00
Saturday 06:30 - 23:00
Sunday 06:30 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Batti.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Batti.lk:

Shortcuts

Share